பாடம் : 4 மதீனாவின் இரு மலைகள்.
1873. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) ‘மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 29