«إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ
பாடம் : 13 நாம் எழுதத் தெரியாதவர்களாகவும், விண் கலையை அறியாதவர்களாகவும் உள்ளோம் என்ற நபி (ஸல்) அவர்கள் கூற்று.
1913. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 30