كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ»
பாடம் : 56
சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.
அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார் என்றே கூறினார்கள்.
மனிதர்களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
217. ‘நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் செல்வார்களானால் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு செல்வேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்வார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4