أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي المَسْجِدِ فَقَالَ: «دَعُوهُ حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»
பாடம் : 57
பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.
219. ‘ஒரு கிராமவாசி பள்ளியினுள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, ‘அவரைவிட்டு விடுங்கள்’ என்று கூறிவிட்டு, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது ஊற்றினார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4