🔗

புகாரி: 2205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 91 அறுவடை செய்யப்படாத கதிர்களை (முகத்தலளவையில்) அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு விற்பது.

2205. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள். ‘முஸாபான’ என்பது ஒருவரின் தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலுள்ள கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதுமாகும்! இவை அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!’
Book : 34