🔗

புகாரி: 2295

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ: أَبُو قَتَادَةَ عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ


2295. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. ‘இவர் கடனாளியா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது நபித்தோழர்கள் ‘இல்லை!’ என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இவர் கடனாளியா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!’ என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!’ என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
Book :39