🔗

புகாரி: 2310

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي قَدْ وَهَبْتُ لَكَ مِنْ نَفْسِي، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: «قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»


பாடம்: 9

ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்துவைக்கும் உரிமையைத் தலைவருக்கு வழங்குதல்.

2310. ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன். (மணக்கொடை இல்லாமல் என்னை மணந்துகொள்ளுங்கள்)” என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் ‘‘இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கேட்டார்.

‘‘உம்மிடமிருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு இவரை நாம் மணமுடித்துவைத்தோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 40