🔗

புகாரி: 2340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانُوا يَزْرَعُونَهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ، فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا، فَإِنْ لَمْ يَفْعَلْ، فَلْيُمْسِكْ أَرْضَهُ»


2340. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

மக்கள் (நபி-ஸல்) அவர்கள் காலத்தில்), விளைச்சலில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதியைத் தமக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் தம் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர், தானே அதனைப் பயிரிடட்டும். அல்லது அதனை (தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது பிரதிபலன் எதிர் பார்க்காமல்) இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், தன் நிலத்தை அவர் அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 41