«كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»
பாடம் : 71
பழரசம், போதையூட்டும் பானம் ஆகிய வற்றில் உளூ செய்வது கூடாது.
இவற்றில் உளூ செய்வதை ஹஸன் அல்பஸரீ (ரஹ்), அபுல் ஆலியா (ரஹ்) ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (தண்ணீர் கிடைக்காத போது) பழரசம், பால் ஆகியவற்றில் உளூ செய்வதைவிட, தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் விருப்பமான தாகும் என்று கூறியுள்ளார்கள்.
242. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book : 4