🔗

புகாரி: 2547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும்.

மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும். என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :49