«العَائِدُ فِي هِبَتِهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»
பாடம்: 30
தன் அன்பளிப்பையும் தர்மத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வது எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல.
2621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அத்தியாயம்: 51