🔗

புகாரி: 2663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ فِي مَدْحِهِ، فَقَالَ: «أَهْلَكْتُمْ – أَوْ قَطَعْتُمْ – ظَهَرَ الرَّجُلِ»


பாடம்: 17

மிகையாகப் புகழ்வது வெறுக்கத்தக்கதாகும்; மேலும், (ஒருவர் தாம்) அறிந்தவற்றை மட்டுமே (மற்றவரைப் பற்றிக்) கூறட்டும்.

2663. அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும், அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, “நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது – துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 52