🔗

புகாரி: 2736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»


பாடம்: 18

நிபந்தனை விதிக்கும்போதும், ஒப்புதல் வாக்குமூலம் தரும் போதும் விதிவிலக்குத் தருவது; மக்களுக்கிடையே வழக்கிலுள்ள நிபந்தனைகள்.

ஒருவர் நூறில் ஒன்று அல்லது இரண்டு போக என்று கூறினால்….?

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் வாகனத்தை வாடகைக்கு விடுபவரிடம், உன் வாகனத்தை (தொழுவத்தில்) கட்டி வை. நான் உன்னுடன் இன்ன நாளில் பயணம் செய்யவில்லையென்றால் உனக்கு நூறு திர்ஹம்கள் தந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு, பிறகு குறித்த நாளில் வரவில்லையென்றால் (அவர் நூறு திர்ஹம்களை வாடகைக்கு விடுபவருக்குத் தந்து விட வேண்டும்).

இது குறித்து நீதிபதி ஷுரைஹ் (ரஹ்)அவர்கள், எவர் தானாக முன்வந்து எவரது நிர்பந்தமுமின்றி ஒன்றைத் தன் மீது நிபந்தனையிட்டுக் கொண்டாரோ அதை அவர் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும், இப்னு ஸீரின் (ரஹ்) கூறியதாவது:

ஒருவர் ஓர் உணவுப் பொருளை விற்றார். அப்போது அதை வாங்குபவர், நான் புதன்கிழமையன்று உன்னிடம் வர வில்லையென்றால் உனக்கும் எனக்குமிடையே (நடக்கும் இந்த) வியாபாரம் ரத்தாகி விடும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு புதன்கிழமையன்று வரவில்லை. (இதனால் தகராறு ஏற்பட்டு, வழக்கு) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) (அவர்களிடம் வந்த போது அவர்) அதை வாங்குபவரிடம், நீ (குறித்த நாளில் வராமல்) உன் வாக்குறுதிக்கு மாறுசெய்து விட்டாய் என்று சொல்லி அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தார்கள்.

2736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 54