«اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ»
பாடம்: 23
அல்லாஹ் கூறுகிறான்:
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள். (அல்குர்ஆன்: 4:10)
2766. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . சூனியம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டி உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 55