2900. அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார்கள்.
Book :56