🔗

புகாரி: 3139

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي أُسَارَى بَدْرٍ: «لَوْ كَانَ المُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ»


பாடம்: 16

(போர்ச் செல்வத்தில்) போர்க் கைதிகளை(யும் சேர்த்து) ஐந்து பாகங்களாக்காமலேயே அவர்களு(டைய விடுதலை)க்காக நபி (ஸல்) அவர்கள் உதவ முன் வந்தது.

3139. நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போரில் பிடிபட்ட கைதிகளைப் பற்றிப் பேசும்போது கூறினார்கள்:

முத்யிம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்து, இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலே)விட்டு விடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே)விட்டு விட்டிருப்பேன். என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Book : 57