🔗

புகாரி: 3226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ» قَالَ بُسْرٌ: فَمَرِضَ زَيْدُ بْنُ خَالِدٍ فَعُدْنَاهُ، فَإِذَا نَحْنُ فِي بَيْتِهِ بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ، فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الخَوْلاَنِيِّ: أَلَمْ يُحَدِّثْنَا فِي التَّصَاوِيرِ؟ فَقَالَ: إِنَّهُ قَالَ: إِلَّا رَقْمٌ فِي ثَوْبٍ أَلاَ سَمِعْتَهُ قُلْتُ لاَ، قَالَ: بَلَى قَدْ ذَكَرَهُ


3226. ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார்.

‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள்.

புஸ்ர் இப்னு ஸயீத்(ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை ஸைத் இப்னு காலித்(ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், ‘இவர்கள் (ஸைத்(ரலி), நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘ஆம். ஆனால், ஸைத்(ரலி) (அதை அறிவிக்கும் போது) ‘துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘கேட்கவில்லை’ என்றேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்’ என்று கூறினார்கள்.
Book :59