🔗

புகாரி: 3297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى المِنْبَرِ يَقُولُ: «اقْتُلُوا الحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ البَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الحَبَلَ»


பாடம்: 13

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நினைவு கூருங்கள்: ஒரு முறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உங்கள் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்த போது தங்களுக்குள் மௌனமாய் இருங்கள் என்று அவை பேசிக் கொண்டன.

பின்னர் அது ஓதி முடிக்கப்பட்ட போது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக் கூடியவர்களாய் திரும்பிச் சென்று, எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழி காட்டுகின்றது.

எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும், அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்க வில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் கிடக்கிறார்கள். (46 : 29-32)

பாடம்: 14

அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும் (இறைவன் ஒருவனே என்பதற்கான சான்று உள்ளது) (2:164)

எந்த உயிரினமாயினும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது. (11:56)

தங்களுக்கு மேலே சிறகடித்துப் பறந்து செல்லும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19)

மேலும் காண்க : 31:10; 42:29 

3297. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, ‘பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘துத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும், குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்’ என்று சொல்ல கேட்டேன்.
Book :59