«اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالقَدُّومِ»،
حَدَّثَنَا أَبُو اليَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، وَقَالَ «بِالقَدُومِ مُخَفَّفَةً»
3356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி-மரம், செங்கல் செதுக்கும் ஆயுதம்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்தச் செய்தியை அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஐப் பின் தீனார் அவர்களின் அறிவிப்பில் ‘கதூம்’ என்று இடம்பெற்றுள்ளது.
ஷுஐப் பின் தீனார் அவர்களைப் போன்றே இந்தச் செய்தியை அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அறிவித்துள்ளார்.
மேலும் அஜ்லான் அவர்கள், இந்தச் செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். முஹம்மத் பின் அம்ர் அவர்கள் அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
அத்தியாயம்: 60