🔗

புகாரி: 3417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خُفِّفَ عَلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ»


பாடம்: 36

கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீங்கள் கேளுங்கள். அங்கு வாழ்ந்த மக்கள் சனிக் கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டுங்கள்.

அந்தச் சனிக் கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். சனிக் கிழமை அல்லாத நாட்களில் அம்மீன்கள் அவ்வாறு வர மாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால் அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்……பிறகு, அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக் கூடாதென்று தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்த போது, நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள் என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன்: 7:163-166)


பாடம்: 37

(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி-வேதவாக்கு அறித்தது போல திண்ணமாக உங்களுக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூபின் வழித் தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன்: 4:163)

(‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.)

உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான். நாம் தூதர்களில் சிலருக்கு சிலரைவிட சிறப்பளித்திருக்கிறோம். மேலும், நாம்(நம் தூதர்) தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கியிருந்தோம். (அல்குர்ஆன்: 17:55)

நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம். போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித் தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். (அல்குர்ஆன்: 34:10-11)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: ஸப்பிஹீ மஅஹூ-அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் என்றோம்.


3417. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார்கள்.

மேலும் அவர்கள் தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இந்தச் செய்தியை மூஸா பின் உக்பா அவர்கள் ஸஃப்வான் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


அத்தியாயம்: 60