🔗

புகாரி: 3576

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

عَطِشَ النَّاسُ يَوْمَ الحُدَيْبِيَةِ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رِكْوَةٌ فَتَوَضَّأَ، فَجَهِشَ النَّاسُ نَحْوَهُ، فَقَالَ: «مَا لَكُمْ؟» قَالُوا: لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ وَلاَ نَشْرَبُ إِلَّا مَا بَيْنَ يَدَيْكَ، فَوَضَعَ يَدَهُ فِي الرِّكْوَةِ، فَجَعَلَ المَاءُ يَثُورُ بَيْنَ أَصَابِعِهِ، كَأَمْثَالِ العُيُونِ، فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا قُلْتُ: كَمْ كُنْتُمْ؟ قَالَ: لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا، كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً


3576. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கென்ன ஆயிற்று?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கும் குடிப்பதற்கு வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை’ என்று பதிலளித்தனர்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும் உளூச் செய்தோம்.

அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத் (ரஹ்) கூறினார்:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம்’ என்று பதிலளித்தார்கள்.
Book :61