أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي كَأَنَّ مِشْيَتَهَا مَشْيُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَرْحَبًا بِابْنَتِي» ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ، ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَبَكَتْ، فَقُلْتُ لَهَا: لِمَ تَبْكِينَ؟ ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَضَحِكَتْ، فَقُلْتُ: مَا رَأَيْتُ كَاليَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ، فَسَأَلْتُهَا عَمَّا قَالَ: فَقَالَتْ: مَا كُنْتُ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
3623. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களது நடை, நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “வருக! என் மகளே!” என்று அழைத்து தமக்கு வலப் பக்கம்- அல்லது இடப் பக்கம்- அமர்த்திக் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் இரகசியமாக எதையோ சொல்ல, அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.
நான், “இன்றைக்குப் போல் துக்கம் அண்டிய ஒரு மகிழ்ச்சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை” என்று சொல்லிவிட்டு “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை நான் வெளியிடப்போவதில்லை” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை (ஃபாத்திமா ஒன்றும் கூறவில்லை)
இதன் தொடர்ச்சி பார்க்க: புகாரி-3624 .
அத்தியாயம் : 61