أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي لَهُ بِهِ شَاةً، فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ، وَجَاءَهُ بِدِينَارٍ وَشَاةٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، وَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ»،
قَالَ سُفْيَانُ: كَانَ الحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الحَدِيثِ عَنْهُ، قَالَ: سَمِعَهُ شَبِيبٌ مِنْ عُرْوَةَ فَأَتَيْتُهُ، فَقَالَ شَبِيبٌ إِنِّي لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ الحَيَّ يُخْبِرُونَهُ عَنْهُ
3642. ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் குலத்தார் உர்வா பின் அபில்ஜஅத் அல்பாரிகீ (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உர்வா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனார் (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவர், அவ்விரண்டில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும், ஓர் ஆட்டையும் கொண்டுவந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு வளம் கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்துவிடுவார் என்ற நிலையில் இருந்தார்.
அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹஸன் பின் உமாரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, உர்வா பின் அபுல்ஜஅத் (ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று சொல்லி எம்மிடம் கொண்டுவந்தார். நான் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்களிடம் சென்றேன்.
அவர்கள் என்னிடம், “நான் இந்த ஹதீஸை உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். (இதற்கு அடுத்த ஹதீஸைக் காண்க: புகாரி-3643)
அத்தியாயம்: 61