🔗

புகாரி: 3718

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


3718. மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார்.
நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, ‘(உங்களுக்குப் பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்’ என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?’ என்று கேட்க அம்மனிதர், ‘ஆம்; ஸுபைர்(ரலி) அவர்களைத் தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)’ என்று பதில் கூறினார். அப்போது உஸ்மான்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்’ என்று மூன்று முறை கூறினார்கள்.
Book :62