🔗

புகாரி: 3781

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَآخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ كَثِيرَ المَالِ، فَقَالَ سَعْدٌ: قَدْ عَلِمَتِ الأَنْصَارُ أَنِّي مِنْ أَكْثَرِهَا مَالًا، سَأَقْسِمُ مَالِي بَيْنِي وَبَيْنَكَ شَطْرَيْنِ، وَلِي امْرَأَتَانِ فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَأُطَلِّقُهَا، حَتَّى إِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ، فَلَمْ يَرْجِعْ يَوْمَئِذٍ حَتَّى أَفْضَلَ شَيْئًا مِنْ سَمْنٍ وَأَقِطٍ، فَلَمْ يَلْبَثْ إِلَّا يَسِيرًا حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ، وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْيَمْ». قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ، فَقَالَ «مَا سُقْتَ إِلَيْهَا؟». قَالَ: وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»


3781. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். – ஸஅத்(ரலி), ‘அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வததை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்’ என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்’ என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்யையும், இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம் தான் சென்றிருக்கும். அதற்குள் அவர்கள் தம் மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன இது?’ என்று கேட்க, ‘நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்தேன்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு என்ன (மஹ்ர்) கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்… அல்லது ஒரு பேரீச்சங் கொடையளவு தங்கம்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) வலீமா (மண விருந்து) கொடு’ என்று கூறினார்கள்.
Book :63