🔗

புகாரி: 3897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

عُدْنَا خَبَّابًا فَقَالَ: «هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُرِيدُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَضَى لَمْ يَأْخُذْ مِنْ أَجْرِهِ شَيْئًا، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، قُتِلَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ نَمِرَةً، فَكُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ بَدَتْ رِجْلاَهُ وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ بَدَا رَأْسُهُ، فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَنَجْعَلَ عَلَى رِجْلَيْهِ، شَيْئًا مِنْ إِذْخِرٍ، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ، فَهُوَ يَهْدِبُهَا»


3897. அபூ வாயில் (ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனையளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் ஹிஜ்ரத் செய்ததற்கான (இவ்வுலகப்) பிரதிபலனில் சிறிதையும் பெறாமல் சென்றுவிட்டவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் தாம் முஸ்அப் இப்னு உமைர் (ரலி). அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். கோடிட்ட வண்ணத் துணி ஒன்றை அவர்விட்டுச் சென்றிருந்தார். நாங்கள் (அவருக்குக் கஃபனிடுவதற்காக) அவரின் (சடலத்தின்) தலையை அதனால் மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின. அவரின் கால்களை மூடினால் அவரின் தலை தெரியலாயிற்று.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், முஸ்அப் (ரலி) அவர்களின் தலையை மூடி விடும்படியும் அவர்களின் இரண்டு கால்களிலும் இத்கிர் புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும் படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்தததற்கான) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.
Book :63