🔗

புகாரி: 4012

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ عَمَّيْهِ، وَكَانَا شَهِدَا بَدْرًا، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” نَهَى عَنْ كِرَاءِ المَزَارِعِ

قُلْتُ لِسَالِمٍ: فَتُكْرِيهَا أَنْتَ؟ قَالَ: «نَعَمْ، إِنَّ رَافِعًا أَكْثَرَ عَلَى نَفْسِهِ»


4012 & 4013. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடைசெய்தார்கள்’ என்று பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களான என் தந்தையின் இரண்டு சகோதரர்கள் (ளுஹைர், முளஹ்ஹர்) கூறினர்.

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்:

நான் ஸாலிம் அவர்களிடம், ‘நீங்கள் விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ என்று கூறிவிட்டு, ‘ராஃபிஉ தன் மீது சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டார்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 64