تَعُدُّونَ أَنْتُمُ الفَتْحَ فَتْحَ مَكَّةَ، وَقَدْ كَانَ فَتْحُ مَكَّةَ فَتْحًا، وَنَحْنُ نَعُدُّ الفَتْحَ بَيْعَةَ الرِّضْوَانِ يَوْمَ الحُدَيْبِيَةِ، كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً، وَالحُدَيْبِيَةُ بِئْرٌ، فَنَزَحْنَاهَا فَلَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهَا، فَجَلَسَ عَلَى شَفِيرِهَا ثُمَّ «دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ مَضْمَضَ وَدَعَا ثُمَّ صَبَّهُ فِيهَا، فَتَرَكْنَاهَا غَيْرَ بَعِيدٍ، ثُمَّ إِنَّهَا أَصْدَرَتْنَا مَا شِئْنَا نَحْنُ وَرِكَابَنَا»
பாடம்: 36
ஹுதைபியா போர்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (அல்குர்ஆன்: 48:18)
4150. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(“நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்” எனும் 48:1ஆம் வசனத்திலுள்ள) “வெற்றி’ என்பது மக்கா வெற்றி(யைத்தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபியா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) “ரிள்வான்’ உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம்.
(அன்று) நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபியா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக்கூட விட்டுவிடாமல் நாங்கள் (தண்ணீரை) இறைத்துவிட்டோம். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரால்) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் வாய் கொப்புளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூ செய்து வாய் கொப்புளித்த) அந்தத் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள்.
பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் ஊர்திப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது.
அத்தியாயம்: 64