🔗

புகாரி: 4201

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَبَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةَ فَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا»

فَقَالَ ثَابِتٌ لِأَنَسٍ مَا أَصْدَقَهَا؟ قَالَ: «أَصْدَقَهَا نَفْسَهَا فَأَعْتَقَهَا»


4201. அனஸ் (ரலி) அறிவித்தார்.

(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த்ஹுயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்.

 

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்) கூறினார்:

இச்செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்’ என்று கேட்டேன். ‘(ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள்’ என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.
Book :64