قَالَ اللَّهُ: «كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي، وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَزَعَمَ أَنِّي لاَ أَقْدِرُ أَنْ أُعِيدَهُ كَمَا كَانَ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ، فَقَوْلُهُ لِي وَلَدٌ، فَسُبْحَانِي أَنْ أَتَّخِذَ صَاحِبَةً أَوْ وَلَدًا»
பாடம் : 8
அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116 ஆவது வசனத் தொடர்).
4482. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை.
என்னை அவன் நம்ப மறுத்தது, ‘அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது’ என்று அவன் எண்ணியதேயாகும்.
அவன் என்னை ஏசியது, ‘எனக்குக் குழந்தை உண்டு’ என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்’ என்று அல்லாஹ் கூறினான். என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 65