🔗

புகாரி: 4505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فَلاَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَيْسَتْ بِمَنْسُوخَةٍ هُوَ الشَّيْخُ الكَبِيرُ، وَالمَرْأَةُ الكَبِيرَةُ لاَ يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا، فَيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا»


பாடம் : 25 (நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவ ளிப்பது கடமையாகும். ஆனால்,எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம். அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப் பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம் என்று அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்.41 ஹஸன் அல்பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42 (குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம். தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்து விட்ட பின்னால், ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக் கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள். (இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள சிரமப்படுகின்றவர்கள் எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் யுதீகூனஹு என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை(குர்ஆன் அறிஞர்களின் நிலை)யாகும்.43
4505. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி), ‘வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத்துன் தஆமு மிஸ்கீன்’ (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பைவிட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனத்தை ஓதி, ‘இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்’ என்று கூறினார்கள்.
Book : 65