🔗

புகாரி: 4563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ، «قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ حِينَ أُلْقِيَ فِي النَّارِ، وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» حِينَ قَالُوا: {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا، وَقَالُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ} [آل عمران: 173]


பாடம் : 12 அவர்கள் (எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப்படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து,தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு எனும் (3:172ஆவது) இறைவசனம்.22 (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கர்ஹ் எனும் சொல்லுக்குப்படுகாயம் என்று பொருள். இஸ்தஜாபூ (இணங்கினர்) எனும் சொல்லுக்கு பதிலளித்தார்கள் என்று பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸ்தஜீபு என்பதற்கு, பதிலளிப்பார் என்று பொருள். பாடம் : 13 இவர்களிடம் நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக் கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் இவர்கள் கூறினார்கள் எனும் (3:173ஆவது) இறைவசனம்.
4563. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது ‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத்(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்’ என மக்கள் (சிலர்) கூறியபோது கூறினார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. ‘எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.
Book : 65