«مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ»، وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ،
فَسَمِعْتُهُ يَقُولُ: {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ} [النساء: 69] فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ
பாடம்: 13
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன்: 4:69) எனும் இறைவசனம்.
4586. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘(இறுதியாக) நோயுற்றுவிடுகிற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு – மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன்.
(இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
அத்தியாயம்: 65