🔗

புகாரி: 4606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَتِ اليَهُودُ لِعُمَرَ: إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً لَوْ نَزَلَتْ فِينَا لاَتَّخَذْنَاهَا عِيدًا، فَقَالَ عُمَرُ: ” إِنِّي لَأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ، وَأَيْنَ أُنْزِلَتْ، وَأَيْنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَتْ: يَوْمَ عَرَفَةَ وَإِنَّا وَاللَّهِ بِعَرَفَةَ – قَالَ سُفْيَانُ: وَأَشُكُّ – كَانَ يَوْمَ الجُمُعَةِ أَمْ لاَ ” {اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ} [المائدة: 3]


பாடம் : 1

அல்மாயிதா அத்தியாயத்தின் பதவுரை.

(5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஹுரும் (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஹராம் என்பதாகும்.

(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபபிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும் என்பதற்கு அவர்கள் தம் வாக்குறுதியை முறித்து விட்ட காரணத்தால் என்று பொருள்.

(5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்லத்தீ க(த்)தபல்லாஹு எனும் வாக்கியத்திற்கு அல்லாஹ் உங்களுக்காக அமைத்து(வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்) என்று பொருள்.

(5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபூஅ எனும் சொல்லுக்கு நீயே சுமந்து கொண்டு என்று பொருள்.

(5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாயிரத்துன் எனும் சொல்லுக்கு ஏதேனும் துன்பம் என்று பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஃக்ரய்னா (ஊட்டினோம்) எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) இஃக்ராஃ என்பதற்குச் சாட்டுதல் என்று பொருள்.

(5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உஜூரஹுன்ன எனும் சொல்லுக்கு அப்பெண்களுக்குரிய மஹ்ர்(விவாகக் கொடை)களை என்று பொருள்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின் எனும் சொல்லுக்கு அல்அமீன்-நம்பகமான காவலன் என்று பொருள். அதாவது இந்தக் குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனிலுள்ள, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற் றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுங்கள்” எனும் (5:68)வசனத்தை விட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2

(5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

(5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மன் அஹ்யாஹா (எவன் ஓர் உயிரை வாழ வைக்கின்றானோ…) என்பதற்கு முறையின்றியே தவிர ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றவன் மக்கள் அனைவரையுமே வாழவைத்தவன் ஆவான் என்பது நோக்கப் பொருளாகும்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷிர்அத்தன் வ மின்ஹாஜன் என்பதற்கு பாதை மற்றும் நடைமுறை என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப இன் உஸிர எனும் சொல்லுக்கு வெளிப்பட்டால், -தெரியவந்தால் என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அவ்லயானி(அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை (அல்) அவ்லா என்பதாகும்.

பாடம் : 2

இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் எனும் (5:3ஆவது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

4606. தாரிக் இப்னு யுஹாப் (ரஹ்) அறிவித்தார்.

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். உமர் (ரலி), ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்:

‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்’ எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.

Book : 65