آخِرُ آيَةٍ نَزَلَتْ: {يَسْتَفْتُونَكَ قُلْ: اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ} [النساء: 176] وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةٌ
பாடம் : 1 (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குவோரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர் களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்எனும் (9:1ஆவது) இறைவசனம். (9:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதான் எனும் சொல்லுக்கு அறிவிப்பு என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (9:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உதுனு (யுஃமினு) எனும் சொற்றொடருக்கு (அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி என்று பொருள். (9:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள தூய்மைப்படுத்துகின்ற எனும் ஒரே பொருள் கொண்ட) துதஹ்ஹிருஹும் மற்றும் துஸக்கீஹிம் போன்ற இரு சொற்களைப் பயன்படுத்துவது (அரபுகள் வழக்கில்) மிகுதி யாக உண்டு. (துஸக்கீஹிம் என்பதன் வேர்ச் சொல்லான) ஸகாத் எனும் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்; மனத் தூய்மைஆகிய பொருள்கள் உண்டு. (இதே ஸகாத் எனும் சொல் இடம் பெற்றுள்ள 41:7ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) லாயுஃத்தூனஸ் ஸகாத்த (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவ ருமில்லை என்று உறுதி கூறாதவர்கள். (9:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள யுளாஹிஊன எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) யுளாஹுன எனும் சொல் லுக்கு ஒத்திருக்கிறார்கள் என்று பொருள்.
4654. பராஉ(ரலி) அவர்களிடம் அறிவித்தார்.
‘(நபியே!) உங்களிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அல்லாஹ் அத்தகையவர்கள் குறித்து உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறான்.. என்று நீங்கள் கூறுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:17 வது) இறை வசனம் தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.
Book : 65