🔗

புகாரி: 4689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَكْرَمُ؟ قَالَ: «أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ»، قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِي» قَالُوا: نَعَمْ، قَالَ: «فَخِيَارُكُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا» تَابَعَهُ أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ


பாடம் : 2 திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன எனும் (12:7 ஆவது) இறைவசனம்.

4689. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் ‘நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர்(இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.

இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 65