🔗

புகாரி: 4697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَفَاتِحُ الغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلَّا اللَّهُ: لاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي المَطَرُ أَحَدٌ إِلَّا اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلَّا اللَّهُ


பாடம் : 1 ஒவ்வொரு கர்ப்பிணியும் (தன் கருப்பையில்) சுமந்து கொண்டிருப்பவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக் கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான் எனும் (13:8ஆவது) இறைவசனம். (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தஃகீளு எனும் சொல்லுக்குக் குறைகின்ற என்று பொருள்.

4697. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வருமென்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கம் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 65