سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى المِنْبَرِ: ” {وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ} [الزخرف: 77] ” وَقَالَ قَتَادَةُ: {مَثَلًا لِلْآخِرِينَ} [الزخرف: 56]: «عِظَةً لِمَنْ بَعْدَهُمْ» وَقَالَ غَيْرُهُ: {مُقْرِنِينَ} [إبراهيم: 49]: ” ضَابِطِينَ، يُقَالُ: فُلاَنٌ مُقْرِنٌ لِفُلانٍ ضَابِطٌ لَهُ، وَالأَكْوَابُ الأَبَارِيقُ الَّتِي لا خَرَاطِيمَ لَهَا “، {أَوَّلُ العَابِدِينَ} [الزخرف: 81]: «أَيْ مَا كَانَ، فَأَنَا أَوَّلُ الآنِفِينَ، وَهُمَا لُغَتَانِ رَجُلٌ عَابِدٌ وَعَبِدٌ» وَقَرَأَ عَبْدُ اللَّهِ: ” وَقَالَ الرَّسُولُ: يَا رَبِّ ” وَيُقَالُ: {أَوَّلُ العَابِدِينَ} [الزخرف: 81]: «الجَاحِدِينَ، مِنْ عَبِدَ يَعْبَدُ» وَقَالَ قَتَادَةُ: ” فِي أُمِّ الكِتَابِ: جُمْلَةِ الكِتَابِ أَصْلِ الكِتَابِ ” {أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَنْ كُنْتُمْ قَوْمًا مُسْرِفِينَ} [الزخرف: 5]: «مُشْرِكِينَ، وَاللَّهِ لَوْ أَنَّ هَذَا القُرْآنَ رُفِعَ حَيْثُ رَدَّهُ أَوَائِلُ هَذِهِ الأُمَّةِ لَهَلَكُوا»، {فَأَهْلَكْنَا أَشَدَّ [ص:131] مِنْهُمْ بَطْشًا وَمَضَى مَثَلُ الأَوَّلِينَ} [الزخرف: 8]: «عُقُوبَةُ الأَوَّلِينَ»، {جُزْءًا} [البقرة: 260]: «عِدْلًا»
4819. யஅலா இப்னு உமைய்யா அத்தமீமி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 43:77 வது) வசனத்தை ஓதக் கேட்டேன்.
கத்தாதா(ரஹ்) கூறினார்
(திருக்குர்ஆன் 43:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸலன் லில் ஆம்ரீன்’ எனும் சொற்றொடருக்குப் ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள்.
கத்தாதா(ரஹ்) அல்லாதோர் கூறினார்
(திருக்குர்ஆன் 43:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்குக் ‘கட்டுப்படுத்தக் கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக் கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
(திருக்குர்ஆன் 43:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ எனும் சொல்லுக்குக் ‘கைப்பிடிகள் இல்லாத கோப்பைகள்’ என்று பொருள்.
கத்தாதா(ரஹ்) கூறினார்
(திருக்குர்ஆன் 43:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்முல் கிதாப்’ என்பதற்கு ‘மொத்த ஏடு – மூல ஏடு’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 43:81 வது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். ‘ரஜுலுன் ஆபிதுன்’ எனும் சொல்லுக்கும், ‘ரஜுலுன் அபிதுன்’ எனும் சொல்லுக்கும் ‘வணங்கும் மனிதன்’ என்றே பொருள்.
(வகீலிஹீ யா ரப்பீ எனும் 43:88 வது வசனத்தை) ‘வ காலர் ரஸ_லு யாரப்பீ’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதியுள்ளார்கள்.’அபித, ‘ய அபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் விணையாலணையும் பெயரின் பன்மையான) ‘ஆபிதின்’ என்பதற்கு மறுக்கக் கூடியவர்கள்’ என்று பொருள்’ என்றும் கூறப்படுகிறது.
Book :65