«إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ»
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
61 . அஸ்ஸஃப் (எனும் 61 வது அத்தியாயம்)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 61:14) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மன் அன்ஸாரீ இலல்லாஹ்’ (இறைவழியில் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது:
இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்?
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 61:4) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்ஸூஸ்’ எனும் சொல்லுக்கு ‘ஒன்றோடொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது” என்பது பொருள்.
மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘மர்ஸூஸ்’ என்பதற்கு ‘ஈயத்தால் வார்க்கப்பட்டது’ என்பது பொருள்.
பாடம்: 1
எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈஸா அலை கூறினார்) எனும் (அல்குர்ஆன்: 61:6) ஆவது வசனத் தொடர்.
4896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பல பெயர்கள் உண்டு.
1 . நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன்.
2 . இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன்.
3 . நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான்.
4 . நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன். என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.
5 . நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
அத்தியாயம்: 65