لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ، قَالَ: ” أَتَيْتُ عَلَى نَهَرٍ، حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا، فَقُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا الكَوْثَرُ
பாடம் : 1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷானிஅக்க எனும் சொல்லுக்கு உங்களுடைய பகைவன் என்று பொருள்.
4964. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘ஜிப்ரீலே, இது என்ன?’ என்று கேட்டேன்.
‘இது அல்கவ்ஸர்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.
என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 65