كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الكَهْفِ، وَإِلَى جَانِبِهِ حِصَانٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، فَتَغَشَّتْهُ سَحَابَةٌ، فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالقُرْآنِ»
பாடம்: 11
அல்கஹ்ஃப் எனும் (18 ஆவது) அத்தியாயத்தின் சிறப்பு.
5011. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18 ஆவது) அத்தியாயத்தை (தன் வீட்டில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இரண்டு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு, மெல்ல மெல்ல நெருங்கலாயிற்று. அதனால் அவரின் குதிரை மிரளத் தொடங்கியது. எனவே அவர் விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 66