أَنَّ رَجُلًا قَامَ فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ مِنَ السَّحَرِ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ لاَ يَزِيدُ عَلَيْهَا، فَلَمَّا أَصْبَحْنَا أَتَى الرَّجُلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
5014. கதாதா பின் நுஅமான் (ரலி) கூறினார்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் (அதிகாலைக்கு முன்னுள்ள) ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து, ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தை மட்டுமே ஓதி (தொழுது)வந்தார். அதைவிட அதிகமாக (வேறு எதையும்) அவர் ஓதுவதில்லை. காலையானபோது இன்னொரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (புகாரி-5013 இல் ஹதீஸில் உள்ளபடி) கூறினார்.
அத்தியாயம்: 66