«اقْرَإِ القُرْآنَ فِي شَهْرٍ» قُلْتُ: إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ: «فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلاَ تَزِدْ عَلَى ذَلِكَ»
5054. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது’ என்று கூறினேன். ‘அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே’ என்று கூறினார்கள்.
Book :66