🔗

புகாரி: 5092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: {وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى} [النساء: 3]، قَالَتْ: يَا ابْنَ أُخْتِي، هَذِهِ اليَتِيمَةُ تَكُونُ فِي حِجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَنْتَقِصَ صَدَاقَهَا «فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ إِلَّا أَنْ يُقْسِطُوا فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ». قَالَتْ: ” وَاسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ: {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} [النساء: 127] إِلَى {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] فَأَنْزَلَ اللَّهُ لَهُمْ: أَنَّ اليَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا وَنَسَبِهَا وَسُنَّتِهَا فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ المَالِ وَالجَمَالِ، تَرَكُوهَا وَأَخَذُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ ” قَالَتْ: فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا، فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا، إِلَّا أَنْ يُقْسِطُوا لَهَا، وَيُعْطُوهَا حَقَّهَا الأَوْفَى فِي الصَّدَاقِ


பாடம் : 17 பொருளாதாரத்தில் பொருத்தம் பார்ப்பதும், ஏழைக்குப் பணக்காரியை மணமுடித்து வைப்பதும்.

5092. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்..” எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்து வருகிற அநாதைப் பெண் ஆவாள்.

அப்பால் அவளுடைய அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதியான) மஹ்ரை (விவாக கொடையை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்குரிய உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்தால் தவிர, அவர்களை மணந்து கொள்ளக்கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடைவிதிக்கப்பட்டது. மேலும், இதரப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணந்துகொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது.

இதற்குப் பின்பும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தவனான அல்லாஹ் அப்போது, ‘பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்” என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான். அதாவது ‘ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (விவாகக் கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடுன் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் காப்பாளர்கள் விரும்புகின்றனர். (அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத்தகாதவளாக இருப்பின், அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்’ என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.

”அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்)விட்டு விடுவது போல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளுடைய உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டாலே ஒழிய அவளை மணந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித்தான். 28

Book : 67