பாடம் : 106 ஒருவர் தம் துணைவியரில் ஒருவரை மற்றவரை விட அதிகமாக நேசிப்பது.
5218. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்
(என் அண்டை வீட்டு அன்சாரி நண்பர், நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, என்னருமை மகளே! தம் அழகும், தம் மீது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் – ஆயிஷா – (நபியவர்களிடம்) சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்து விடாதே!” என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள். 149
Book : 67