«عَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأْسُهُ عَلَى فَخِذِي»
பாடம்: 126
ஒருவர் தம் நண்பரிடம் ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவைத் தொடங்கினீர் களா?” என்று கேட்பதும், ஒருவர் தம் புதல்வியைக் கண்டிக்கும்போது இடுப்பில் குத்துவதும்.
5250. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள் என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தமது கரத்தால் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது மடியில் தலைவைத்துப் படுத்திருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது.
அத்தியாயம்: 67