🔗

புகாரி: 5300

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ» ثُمَّ قَالَ بِيَدِهِ فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدِهِ، ثُمَّ قَالَ: «وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»


பாடம் : 1 குடும்பத்தாருக்குச் செலவிடுவதன் சிறப்பு. அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இவர்கள் உங்களிடம், நாங்கள் எதை (தர்மமாக)ச் செலவிடவேண்டும்? என்று கேட்கிறார்கள். (தேவைக்குப் போக) மீதமுள்ளதை என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் இம்மை மறுமை குறித்துச் சிந்தித்து உணர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விளக்கிக் காட்டு கின்றான். (2:219) ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அஃப்வ்’ எனும் சொல், (குடும்பச் செலவுகள் போக) மீதத்தைக் குறிக்கும். 2

5300. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘ஆம்! (தெரிவியுங்கள்) இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினர்.

‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய பின் தம் விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்துவிட்டுத் தம் கையால் (எதையோ) எறிபவர் போல் (சைகை) செய்தார்கள். பிறகு ‘அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்ற கூறினார்கள்.69

Book : 68