🔗

புகாரி: 533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا اشْتَدَّ الحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


பாடம்: 9

கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும் வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது. 

533. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 9