«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبِيعُ نَخْلَ بَنِي النَّضِيرِ، وَيَحْبِسُ لِأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ»
பாடம் : 3 ஒருவர் தம் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைப்பது (செல்லும் என்பது)ம், தம்மைச் சார்ந்தோருக்கு அவர் செலவிட வேண்டிய முறையும்.
5357. மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சுஃப்யான் அஸ்ஸவ்ரி (ரஹ்) அவர்கள் என்னிடம் தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன் கூட்டியே) சேமித்து வைப்பரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டிருக்கீன்றீர்களா? என்று கேட்டார்கள். நான் (அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை என்று சொன்னேன். பிறகு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது„ நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரிச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன் கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்.
Book : 69