🔗

புகாரி: 5364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ»


பாடம் : 9 கணவன் செலவுக்கு(ப் பணம்) தராவிட்டால் அவனுக்குத் தெரியாமல் தனக்கும் தன் குழந்தைக்கும் வேண்டியதை நியாயமான அளவில் எடுத்துக்கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு.

5364. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!’ என்று கூறினார்கள். 18

Book : 69